காதலுக்கு எதிர்ப்பு - தாய், தந்தையை அடித்துக்கொன்ற மகன்

by Staff / 23-04-2023 01:01:24pm
காதலுக்கு எதிர்ப்பு - தாய், தந்தையை அடித்துக்கொன்ற மகன்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் வசித்துவந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேணுகாதேவி தம்பதி. இவர்களுக்கு கார்த்திக்(21) என்ற மகன் உள்ளார். நேற்று வீட்டில் ரேணுகாதேவி சடலமாகவும், கிருஷ்ணமூர்த்தி படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஜேசிபி ஓட்டுனரான கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கொள்ளையர்களை தடுக்க முயன்ற தன்னை கிணற்றில் தள்ளிவிட்டு சென்றதாக கூறினார். சந்தேகமடைந்த போலீசார் கார்த்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தன் பெற்றோரை அடித்துக்கொன்றதாக ஒப்புக்கொண்டார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை அவர் அடித்துக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories