விழாக்காலம் தொடங்கியுள்ளதால் ஆம்னி பேருந்துக்கள் புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளது.

by Editor / 01-10-2022 08:40:30am
விழாக்காலம் தொடங்கியுள்ளதால் ஆம்னி பேருந்துக்கள் புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணிநிமிர்த்தமாகத் தலைநகர் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் செந்த ஊர்களுக்கு செல்ல பெரும்பாலும் மக்கள் பேருந்து போக்குவரத்தையே நம்பி வருகின்றனர்.

பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தோடு குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது. வரவிருக்கும் ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில்  ஆம்னி பேருந்து சங்கம்  தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியிட்டுள்ளது.அதிகபட்சமாக தென்மாவட்டங்களுக்குத்தான் அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த எந்த ஊருக்கு என்னென்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்:

சென்னை – கோவை: குறைத்த பட்சம் ரூ1815 முதல் அதிகபட்சம் 3025

சென்னை – மதுரை: குறைந்த பட்சம் ரூ1776 முதல் அதிகபட்சம் 2688

சென்னை – சேலம்: குறைந்த பட்சம் ரூ1435 முதல் அதிகபட்சம் 2109

சென்னை – பழனி குறைந்த பட்சம் ரூ1650 முதல் அதிகபட்சம் 2750

சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை – திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை – திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1667 முதல் அதிகபட்சம் 2777

சென்னை – நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1271 முதல் அதிகபட்சம் 1767

சென்னை – திருச்சி குறைந்த பட்சம் ரூ 1394 முதல் அதிகபட்சம் 1938

சென்னை – உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2211 முதல் அதிகபட்சம் 3630

சென்னை – திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2112 முதல் அதிகபட்சம் 3520

சென்னை – ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465

சென்னை – ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437

சென்னை – தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355

சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465  ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via