by Staff /
13-07-2023
12:03:44pm
தலைநகர் டெல்லியில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. அலிபூர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வரும் மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<br />
Tags :
Share via