தருமபுரி மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம் மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவு.

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஏழு தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த சேதுலிங்கம் பாலக்கோடு சமூக நல பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்து வந்த ரேவதி தர்மபுரி வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த இளஞ்செழியன் தர்மபுரி ஆய மேற்பார்வை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு பணிபுரிந்து வந்த கண்ணன் அரூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி நெடுஞ்சாலை அலகு-2 (நிலம் எடுப்பு) தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ராஜராஜன், தர்மபுரி அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றி வந்த செளகத்அலி,தருமபுரி முத்திரைத்தாள் கட்டணம் தனி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முத்திரைத்தாள் கட்டண தனி தாசில்தாராக பணியாற்றி வந்த வினோதா தர்மபுரி நெடுஞ்சாலை அலகு-2 (நிலம் எடுப்பு)தனி தாசாதாரராக பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
Tags : தருமபுரி மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் மாற்றம் மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவு.