18 மற்றும் 19ம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை.

by Editor / 17-10-2022 09:20:55am
18 மற்றும் 19ம் தேதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை.

வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில், 48 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.இந்நாட்களில், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via