ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் குடும்பத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளனர். தனது மகள் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என இபிஎஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, "வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உள்ளது. காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை. சிபிஐ விசாரணை வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
Tags :