குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

by Staff / 16-11-2022 11:23:31am
குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை முசிறி அந்தரபட்டியை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரெங்கநாதன் (21) என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரகாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறபடுகிறது. அதன் பின்னர் ரெங்கநாதன் சிறுகாம்பூர் அருகே செங்கொடி குடித்தெருவை மணி (எ) மணிகண்டன் மற்றும் நான்கு நண்பர்களை வரவழைத்துள்ளார்.

பின்னர் 5 பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர். பின்னர் இளைஞர்கள் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் சித்திரை மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை இளைஞர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ வாட்ஸப் வைரலாக பரவியது. இதை கண்ட சிறுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories