ஏர் இந்தியா நிறுவனம் ரூ.984 கோடி தர வேண்டும் - அமெரிக்கா அதிரடி

by Staff / 16-11-2022 11:01:49am
ஏர் இந்தியா நிறுவனம் ரூ.984 கோடி தர வேண்டும் - அமெரிக்கா அதிரடி

அமெரிக்க போக்குவரத்து துறை கொள்கைப்படி, விமானங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் பயணிகளுக்கு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும். அப்படி தர மறுப்பதோ, கட்டணத்துக்கு பதில் பற்றுச்சீட்டுகளை அளிப்பதோ சட்ட விரோதமாகும். இந்த கொள்கைக்கு முரணாக ஏர் இந்தியா நடந்து கொண்டதால், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் 1,900 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பாதிக்கு மேற்பட்ட புகார்களை பரிசீலனை செய்ய ஏர் இந்தியா நிறுவனம் 100 நாட்கள் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா 12 கோடியே 15 லட்சம் டாலரை (ரூ.984 கோடி) திருப்பித்தர வேண்டும் என்று அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை திருப்பித் தருவதில் அதிக தாமதம் செ ய்ததற்காக 14 லட்சம் டாலர் (ரூ.11 கோடியே 24 லட்சம்) அபராதம் விதித்தது.ஏர் இந்தியா மற்றும் 5 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மொத்தம் ரூ.60 கோடி டாலர் (ரூ.4 ஆயிரத்து 860 கோடி) திருப்பித்தர அமெரிக்க உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags :

Share via