தமிழகத்தில் கனமழையால் 11பேர் உயிரிழப்பு

by Staff / 21-05-2024 02:27:43pm
தமிழகத்தில் கனமழையால் 11பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கனமழையின் காரணமாக 16.05.2024 முதல் 20.05.2024 வரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 கால்நடை இறப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 24 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via