வெல்லமண்டி நடராஜனின் மனைவி காலமானார்

by Staff / 27-02-2025 02:24:59pm
வெல்லமண்டி நடராஜனின் மனைவி காலமானார்

அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி மாரடைப்பால் இன்று (பிப்., 27) காலமானார். அவரது மறைவையொட்டி கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடராஜன், சரோஜா தம்பதிக்கு கிருபாகரன், ஜவஹர்லால் நேரு ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நடராஜன் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2016-2021 வரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

 

Tags :

Share via