நவோதயா பள்ளிகள் விரைவில் திறப்பு: நவோதயா வித்யாலயா சமிதி முடிவு
மாநில அரசுகளின் முடிவுக்கேற்ப நவோதயா பள்ளிகளைத் திறக்க நவோதயா வித்யாலயா சமிதி முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், மாநில அரசுகளின் முடிவுக்கேற்ப நவோதயா பள்ளிகளையும் திறக்க நவோதயா வித்யாலயா சமிதி முடிவு செய்துள்ளது. மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எந்த தேதியில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதோ, அதே தேதியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, நவோதயா பள்ளிகளும் திறக்கப்படும் என்று நவோதயா வித்யாலயா சமிதி அறிவித்துள்ளது.
மாநில அரசுகள் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பெற்றோர்களின் விருப்பத்துடன் மாணவர்கள் பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் வரலாம் என்றும் நவோதயா வித்யாலயா சமிதி அறிவித்துள்ளது.
மாணவர்களின் மனநலன், உடல்நலனை கருத்தில் கொண்டு உரிய ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் நவோதயா வித்யாலயா சமிதி தெரிவித்துள்ளது.
Tags :