12 மணி நேரத்தில் 4,200 பேர் மீட்பு... அமெரிக்க வெள்ளைமாளிகை தகவல். ..
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 12 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 200 பேர் அமெரிக்காவுக்கு மீட்டு செல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் அனைத்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் கெடு விதித்திருந்தனர்.
இந்த நிலையில் காபூல் விமான நிலையம் அருகே மற்றும் அருகே உள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நேற்றிரவு நடைபெற்றன. இதில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர், கடல் படை மருத்துவர் ஒருவர் , மற்றும் 60 ஆப்கானிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கர்களை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காபூலில் இருந்து கடந்த 12 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 200 பேர் அமெரிக்காவுக்கு மீட்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் அமெரிக்காவுக்கு மீட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tags :