அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, 1206 என்ற எண்ணை அதிர்ஷ்ட எண் என நம்பி வந்தார். தனது வாகனங்களின் பதிவெண்களிலும் இதையே பயன்படுத்தி வந்தார். விபத்துக்குள்ளான விமானத்தில் அவர் அமர்ந்த இருக்கை எண் 12 ஆக இருந்தது. மேலும், 12.06.2025 என்ற தேதியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அவரது குடும்பத்தினரையும், அம்மாநில மக்களையும் பெரிதும் வேதனையடைய வைத்துள்ளது.
Tags :