துரந்தா். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை புரிந்து உலக அளவில் சுமார் 877 கோடி வசூலித்துள்ளது .
சமீபகாலம் இந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் சாதனை புரிந்து வருகின்றன. அந்த வகையில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் 2025 டிசம்பர் 15 அன்று வெளியான துரந்தா். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை புரிந்து உலக அளவில் சுமார் 877 கோடி வசூலித்துள்ளது ..அது இந்த புத்தாண்டிற்குள் ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனோடு ரிஷப்ஷெட்டி யின் காந்தாரா ஜேப்டர்1, ரூபாய் 852 கோடியையும் வசூலித்து தேக்கம் அடைந்திருந்த திரை உலகத்தை சற்று நிம்மதி அடையச் செய்திருக்கிறது.. நல்ல கதை அம்சமும் இயக்குதலும் இருந்தால் பழம் வெற்றியடையும் என்பதற்கு இந்த படங்கள் சான்றாக அமையும்.
ரா அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஸ்லீப்பர் ஏஜெண்டுகள் பற்றிய இதன் கதைக்களம் நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதங்களை தூண்டியது .இதன் உள்ளடக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் சிங் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் ஹிந்தி சினிமாவில் அதிக வசூல் செய்த ஏ சான்றிதழ் பெற்ற படமாகவும் இது.உள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்தர் பார்ட் 2 ரிவெஞ் மார்ச் 19 2026 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















