இந்திரா காந்தியின் திருஉருவ சிலையை திறந்து வைத்து ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே
இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுனன் கார்கே பதவி ஏற்று முதல் முறையாக நேற்று திமுக தலைவர் மு.க.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அவர் இன்று ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்றார்.அங்கு ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு அருகே நிறுவப்பட்டுள்ள முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் திருஉருவ சிலையை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து பேட்டரி காரில் அழைத்து வரப்பட்டு ராஜீவ் காந்தி உயிர்த் துறந்த இடத்தில் அவருடைய நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மல்லிகார்ஜுன கார்கே மட்டும் தனியாக 2 நிமிடம் அங்கு மௌன அஞ்சலி செலுத்திய பின்பு அங்கே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்து 15 நிமிடங்கள் மௌனம் காக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags : ராஜீவ் காந்தி நினைவிடத்தில் : மல்லிகார்ஜுன கார்கே