ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன
ஹார்முஸ் கடல் வழியாக உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறுவதால் அதன் முடக்கம் கச்சா எண்ணெய் விலை 80 டாலரிலிருந்து விரைவில் 100 டாலர் வரை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. மார்ச் 7ஆம் தேதி வரை இந்த சேவைகள் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது .துபாய், அபுதாபி மற்றும் தோகா போன்ற முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அங்கேயே சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து இயக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயண தேதியை மாற்றிக்கொள்ள அல்லது முழு கட்டணத்தையும் திரும்ப வைப்பற விமான நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளன.
Tags :


















