ஐ ஆர் டி சி ரயில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்த போலி முகவர் கைது.

திண்டுக்கல், முத்துநகரை சேர்ந்த கண்ணன்(56). இவர் அதேபகுதியில் பத்மாவதி டிராவல்ஸ் என்ற பெயரில் பேருந்து விமானம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து வருகிறார். இவர் 6 மாதமாக மத்திய அரசு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி - யிடம் முறையான உரிமம் பெறாமல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து திண்டுக்கல் முத்துநகரில் தன்
வீட்டிலிருந்த கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : ஐ ஆர் டி சி ரயில் டிக்கெட் பதிவு செய்து கொடுத்த போலி முகவர் கைது.