சித்தராமையா, சிவக்குமார் பதவியேற்பு

by Staff / 20-05-2023 01:08:03pm
சித்தராமையா, சிவக்குமார் பதவியேற்பு

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும், எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இன்று பதவியேற்றனர். 75 வயதான சித்தராமையா 2013 முதல் ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக முதலமைச்சரனார். சித்தராமையா அரசில் அமைச்சராக பணியாற்றிய 61 வயதான சிவக்குமார், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராகவும் நீடிப்பார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via

More stories

Logo