18 வயது இளைஞர் கொலை; பெற்றோர் கைது
சத்தீஸ்கரின் ராய்காட் மாவட்டத்தில் 18 வயது இளைஞரின் மரணம் தொடர்பாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த மகனைக் கொன்று சடலத்தையும், பைக்கையும் சாலையோரம் வைத்துவிட்டு விபத்து எனக்கூறி நாடகமாடிய சம்பவத்தில் பெற்றோர்கள் இறுதியாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குஹ்ரு சிங்கரின் மகன் தேக்மணி பைகாராவின் உடல் மே 5 அன்று லக்ரா டோக்ரி சாலையில் லோஹ்தபானி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், சாலையோரம் சடலத்தை பெற்றோர் வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியில் பிரேத பரிசோதனை அறிக்கையால் இருவரும் சிக்கிக் கொண்டனர்.
Tags :



















