ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்ச்சிய கூழில் தவறி விழுந்த பக்தர்கள் உயிரிழப்பு

by Editor / 30-07-2022 01:59:30pm
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்ச்சிய  கூழில் தவறி விழுந்த பக்தர்கள் உயிரிழப்பு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காய்ச்சிய  கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் பக்தர்கள் அன்பளிப்பாக வழங்க பொருட்களை வைத்து கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து பூஜைகள் முடிந்த பின்னர் பிரசாதம் வழங்கப்படும். அதற்காக சுமார் 6 க்கும் மேற்பட்ட பெரிய அண்டாவில் முத்துக்குமார் என்கிற முருகன் என்பவர் சில பக்தர்களுடன் கொள்கை கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழில் தவறி விழுந்ததில் உடல் முழுவதும் வெந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

 

Tags :

Share via

More stories