இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிக கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர்

by Editor / 15-05-2021 10:26:37am
இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிக கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர்

இந்தியாவின் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ' இந்தியாவில் மருத்துமனைகள் நிரம்பியுள்ளன, இறப்புகள் அதிகமாக உள்ளது. அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை' என்று தெரிவித்தார்.

மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு, முதல் ஆண்டைவிடவும் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்றும் எச்சரித்தார் . இந்தியாவின் கொரோனா பாதிப்புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவி வருவதாகவும் , ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் , நடமாடும் கள மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள் , முகக்கவசங்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம் என்றும் அதானோம் கூறினார் .

நேபாளம் , இலங்கை , வியட்நாம் , கம்போடியா , தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன . கோவிட் -19 ஏற்கெனவே உலகெங்கிலும் 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பறித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம் , பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்குதல் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதுதான் தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்

 

Tags :

Share via