48 நாள் விரதமிருந்துகொண்டாடும் விழா-தைப்பூசம்

by Admin / 03-02-2025 11:44:45am
48 நாள் விரதமிருந்துகொண்டாடும் விழா-தைப்பூசம்

தைப்பூசம் தமிழர்கள் முருகப்பெருமாளுக்காக 48 நாள் விரதமிருந்துகொண்டாடும் விழாவாகும். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் தை மாதம் எட்டாவது நட்சத்திரமான பூச நட்சத்திர நேரத்தில்  கொண்டாடப்படுகின்ற விழா. தம் தந்தையார் வைத்த பந்தயத்தின் காரணமாக பழத்தை பெற முடியாமல் போன விரக்தியில் பழனி மலையில் கோவனத்தோடு ஆண்டியாக எழுந்தருளிய நாள் பூச நட்சத்திர நாள்.தைப்பூசம் பிப்ரவரி மாதம் பதினோராம் தேதி .காலம் காலமாக தைப்பூச நாளை கொண்டாடி வருவதை தேவார பாடல் வழி அறிய முடியும். இந்த தைப்பூச தினத்தில் முருகன் எழுந்தருளியுள்ள கோயில்கள் எல்லாம் கூத்துக்களும் அரங்கேறி உள்ளதை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. முருகன் குறிஞ்சி நிலத்தின் தமிழ் கடவுள். தைப்பூசத் அன்றுதான் தர்காசுரனை வதம் செய்து முருகப் பெருமாள் வதம் செய்தார். பிப்ரவரி மாதம் பதினோராம் தேதி கொண்டாடப்படுகின்றது.. இந்த நாளில் தைப்பூசம் பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து அலகு குத்தி காவடி எடுத்து வழிபாட்டை நிகழ்த்துவர்.

உலகம் முழுவதும் , இலங்கை, பினாங்கு,சிங்கப்பூர் ,மொரிசியஸ் ,தென்னாப்பிரிக்கா ,பிஜி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில்முருக பக்தர்கள் மயில் காவடி ,சந்தன காவடி ,சர்ப்பக் காவடி ,சேவக் காவடி அன்னக்காவடி ,வேல் காவடி பால் காவடி ,வாள் காவடி ,விளக்கு காவடி என்று தம் பக்தியின் உச்சத்தை வெளிப்படுத்துவர்.

 தமிழ்நாட்டில் அன்றைய தினத்தில் அரசு பொது விடுமுறை விட்டு உள்ளதால் ,முருகன் குடி கொண்டிருக்கும் அறுவடை வீடுகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

 

Tags :

Share via