திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தாா்.

by Admin / 06-03-2026 09:39:13am
 திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தாா்.

இன்று காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு தர்ப்பாரனேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுடன் கூடிய  சிறப்பு பரிகார நிகழ்வு நடந்தேறியது. மேசம் .ரிஷபம். மீனம், கடகம், கன்னி, விருச்சிகம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் இந்த ரெண்டரை ஆண்டு கால பெயர்ச்சியில் ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கத்தை எதிர் நோக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்கள் பரிகாரம் செய்து கொள்வது மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று வாக்கிய பஞ்சாங்க ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்கள் கடந்த ஆண்டு சனி பெயர்ச்சி முடிந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

 திருநள்ளாரில் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 8 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தாா்.
 
Tags :

Share via

More stories

Logo