18 வயது கடந்தோருக்கு தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்

கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையான அளவு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி, 18 வயது கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, www.cowin.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மே மாதம் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது இணையத்தளம் செயலி மூலமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்த விரும்பும் இருக்கும் பட்சத்தில் முன்பதிவு செய்து, மே மாதம் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.
Tags :