மல்லை சத்யா இன்று திராவிட வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

by Admin / 20-11-2025 02:31:35pm
மல்லை சத்யா இன்று திராவிட வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இன்று திராவிட வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ம.தி.மு.கவில் கட்சியின் முதன்மைச் செயலாளரான துரை வைகோவிற்கும் அவருக்கும் இடையே ஆன கருத்து முரண்பாடு காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.. கட்சி பொதுச்செயலாளர் வைகோ மீதும் மல்லை சத்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.. அதற்கு வைகோவும் பதிலளித்திருந்த நிலையில்,,, தற்பொழுது அவர் தன் ஆதரவாளர்களோடு புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.. ஏற்கனவே ,ம.தி.மு.க வில் முக்கிய முகமாக திகழ்ந்த நாஞ்சில் சம்பத் அதிலிருந்து வெளியேறிய ,பின்னர் அ..தி.மு..க., தி.மு.க என்று தமது ஆதரவான கருத்துக்களை சொல்லி வந்த நிலையில், இப்பொழுது மல்லை சத்யாவோடு கைகோர்த்துள்ளார்.

 

Tags :

Share via

More stories