முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

by Staff / 17-08-2023 11:37:04am
முரசொலி மாறன் படத்திற்கு முதல்வர் மரியாதை

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 90-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குத் தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டம் சிலைமான் அருகே அமைந்துள்ள அண்ணா மண்டபத்தில் முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும், முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories