காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

by Staff / 16-02-2023 05:00:59pm
காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

திருவட்டார் அருகே புதிய காலனி, முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள செருப்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த பாலகார்த்திகா (27) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.அருண் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு நடை பெற்றது. உடனே மனைவி இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது அம்மாவின் வீட்டுக்கு சென்றார். அருண்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்க வில்லை.

இந்த நிலையில் வீட்டில் உள்ளே இருந்து தூர்நாற்றம் வருவதாக வீட்டில் உரிமையாளர் பால கார்த்திகாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே பால கார்த்திகாவும் அவரது அம்மாவும் வந்து பார்க்கும்போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உரிமையாளரின் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் கழிவறையில் அருண்குமார் தூக்கில் தொங்குவது தெரிய வந்தது.இது குறித்து பால கார்த்திகா திருவட்டார் போலிசாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிணத்தை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். காதல் திருமணம் செய்த வாலிபர் 5 ஆண்டுகளில் தூக்குப் போட்டு தற் கொலை செய்த சம்ப வத்தை போலீசார் தீவிர விசாரணை செய்து வரு கிறார்கள்

 

Tags :

Share via

More stories