கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது கணவாய், கிளாத்தி போன்ற மீன்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
Tags : கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை