மதுவுக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவோடு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.
தென்காசி மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு 204 பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் வெள்ளக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி பி செல்வ சுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான பொதுமக்களும்,வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் மதுவால் இளைய சமுதாயம் கெட்டுப் போவதும், குடும்பங்களில் மது பெரும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு துணையாக இருந்து வருவதை தடுக்கும் பொருட்டு மதுக்கடைகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கின்ற தீர்மானம் புதிய தமிழகம் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் இந்த தீர்மானத்தை ஏகோபித்து ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டு இந்த தீர்மானம் இனாம் வெள்ளக்கால் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்களின் ஆதரவோடுமதுவுக்கு எதிரான தீர்மானம் இந்த பகுதியில் நிறைவேற்றப்பட்டது அந்த பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags : மதுவுக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவோடு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்.