துப்பாக்கி சுடும் வீரரான 10ஆம் வகுப்பு மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.

மதுரை புதூரில் வசிக்கும் தனியார் வங்கி அதிகாரி வடிவேல் மற்றும் வழக்கறிஞர் கிருத்திகா தம்பதியினரின் மகன் யுவன் (15), மேலூர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, ஏர்கன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சுடும் வீரரான இவர், சிறுவயதிலிருந்தே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று நிறைய பதக்கங்களை குவித்துள்ளார். இதற்காக மதுரை ரைபிள் கிளப்பிலும் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். சமீபத்தில் தேசிய அளவிலான போட்டிக்கு யுவ நவநீதன் தேர்வான நிலையில், கடந்த சில நாட்களாக அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தேசிய அளவிலான போட்டிக்கு பயிற்சி பெற்றுவந்த பள்ளி மாணவன் திடீரென தற்கொலை செய்துகொள்ள என்ன காரணம்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி சுடும் வீரரின் மரணம் அந்த பகுதியினரையும், சக வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துயர சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags : 10ஆம் வகுப்பு மாணவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை