புதிய வகை காய்ச்சல் உஷார் மக்களே

by Staff / 13-03-2023 11:39:21am
புதிய வகை காய்ச்சல் உஷார் மக்களே

இந்தியா முழுவதும் 3 ஆயிரத்து 38 பேர் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. நடப்பாண்டு ஜனவரியில் 1,245 பேருக்கும் பிப்ரவரியில் 1,307 பேருக்கும் மார்ச் மாதத்தில் 486 பேருக்கும் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளில் மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo