எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து

by Editor / 01-04-2025 02:34:36pm
எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து

மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸ் பகுதியில் பெட்ரோனாஸ் என்ற அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் குழாயில் இன்று (ஏப்.,01) வெடிப்பு ஏற்பட்டது. 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நூறு அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. இதனால் 33 பேர் காயமடைந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல வீடுகள் தீயில் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via