ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் கட்சி

by Staff / 04-06-2023 02:29:30pm
ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் கட்சி

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே 44 அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தார்மீக கடமை, ஆனால் பாஜக அரசிடம் இந்த நேர்மையை எதிர்பார்க்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via