தென்மாவட்ட பயணிகள் ரயில்கள் இன்னும் ஏன் இயக்கப்படவில்லை.-சரத்குமார்

by Editor / 16-02-2022 04:22:42pm
 தென்மாவட்ட பயணிகள் ரயில்கள் இன்னும் ஏன் இயக்கப்படவில்லை.-சரத்குமார்

தென் மாவட்ட பயணிகள் ரயில் முன்பு போல இயக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள்  அளிக்கப்பட்டு சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில் தென் மாவட்ட பயணிகள் ரயில் முன்பு போல் இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுகிறது,

 திருநெல்வேலி -திருச்செந்தூர்,திருநெல்வேலி-செங்கோட்டை-திருநெல்வேலி -தூத்துக்குடி-மதுரை செங்கோட்டை-செங்கோட்டை மதுரை -ராமேஸ்வரம்-மதுரை-திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பயணிகள் ரயில்களும் முழுமையாக இயக்கப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்,இந்த ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருப்பதால்  பொதுமக்களின் அன்றாட வாழ்வும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 

ஒன்றிய,மாநில அரசுகள் தென் மாவட்ட பயணிகள் ரயில்களை முன்புபோல இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தென்மாவட்ட ரயில்கள் சென்னை வரும்போது சென்னையின் முக்கிய ரயில் நிலையமான மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது, ஆனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை, சென்னை பெருநகர விரிவாக்கத்தால் சாலை மார்க்கமாக பயணங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து மக்களின் பொருளாதார நிலைக்கேற்ப வசதியான பயணமாக வெளியூர் பயணம் அமைவதற்கு சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஒன்றிய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில்  சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags : Why Southern Passenger Trains are Not Operating Yet.-Sarathkumar

Share via