ரயிலுக்கு அடியில் விழுந்து மருத்துவர் மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ரயிலுக்கு அடியில் விழுந்து மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர் லகான் சிங் என்பவர் தனது மகளை ரயிலில் அனுப்பி வைக்க ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். மகளை ரயிலில் உட்கார வைத்து விட்டு வழியனுப்பிய நிலையில், ரயில் நகரத் தொடங்கியுள்ளது. உடனே ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, லகான் நடைமேடையில் இருந்து தவறி தண்டவாளத்தின் இடையே சிக்கிக் கொண்டார். அப்போது ரயில் ஏறி அவரது தலை துண்டானது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஓடி வருவதற்குள் அவர் உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Tags :



















