தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ...

by Admin / 25-02-2024 08:21:39am
 தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில்  தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ...

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி சிப்காட்டில் வீன் பாஸ்டர் நிறுவனத்தின் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான   பேட்டரி இந்த தொழிற்சாலையில்  தயாரிக்கப்பட உள்ளது.  16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள  தொழிற்சாலையில்  இருந்து  வருடத்திற்கு  ஒரு லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது...  இந்நிகழ்வின்  தொடர்ச்சியாக முதலமைச்சர் டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியில் உள்ள மீன்பிடி படகுகள் சேதம் அடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார் .இதற்காக இன்று காலை 8 மணிக்கு  விமானத்தில் செல்லும்  முதலமைச்சர்  அன்றைய  தினமே தனி விமானத்தில் சென்னைக்கு  திரும்புகிறார்.

 

 

Tags :

Share via