கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை- சி.வி.சண்முகம் தகவல்.

திண்டிவனம் அடுத்த தீவனூரில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்றது. வழக்கறிஞர் அணியின் தொகுதி செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமாகிய சி.வி சண்முகம் கலந்துக் கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது,பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவி சண்முகம் நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும்,ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்றும் கூறி விட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
Tags : கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை- சி.வி.சண்முகம் தகவல்.