சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவின் 102-வது பிறந்தநாள். பொதுவாழ்விலும் பொதுவுடைமை லட்சியங்களைக் கடைப்பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு' என்று குறிப்பிட்டுள்ளார். 80 ஆண்டு அரசியல் வாழ்வில் சங்கரய்யா, காமராஜர், ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கடராமன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களோடும் பயணித்துள்ளார்.
Tags :