கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் மர்ம மரணம்

விழுப்புரத்தில் ரவுடி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 2023ஆம் ஆண்டில் ரவுடி லட்சுமணன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சக்திவேல், ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டள்ளார். மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :