முகக்கவசம் அணிய முதல்வர் உத்தரவு

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசியவர், "வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், சுவாச பிரச்சனை உடையோர் முகக்கவசம் அணிய வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாரம் 3 நாட்கள் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். கொரோனா உதவி மையம் அமைத்து செயல்படுங்கள்" என கூறினார்.
Tags :