கோவை,நீலகிரி, தேனி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 10-04-2025 09:15:19am
கோவை,நீலகிரி, தேனி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது, வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றுடன், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தென் தமிழ்நாடு வரை வளி மண்டல சுழற்சி ஒன்று நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

 

Tags : கோவை,நீலகிரி, தேனி ,தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Share via

More stories

Logo