இறை அருள் என்றால் என்ன

by Editor / 05-12-2021 12:43:07pm
இறை அருள் என்றால் என்ன

இறை அருள் என்றால் என்ன என்பது பற்றி பலருக்கு இன்றளவும் புரியவில்லை ஆனால் இறை அருள் கண்டிப்பாக நமக்கு வேண்டும் என்பதுதான் அடிப்படை ஆன்மீக அறிவியல் தத்துவம் ஆகும்...
 இறையருளை சேர்க்க வேண்டும் என்றால்... தன்முனைப்பை விடு... ஆணவம் கொள்ளாதே  எல்லாம்...இறைவனின் விருப்பம் என்று...சரணாகதியில் இரு...அன்பு தயவு இரக்கம் கருணை கொண்டு... சத்திய வழியில்.. தர்மத்தை செய்து வாழு... இறையருள் கூடும்...
 இவ்வுலகில்...நீ  எதை சேர்த்தாலும் இறையருள் இல்லை... என்றால் அதனால்.. எந்த ஒரு பயனும் இல்லை.. சேர்க்க வேண்டியது ஒன்றுதான்..அதுவே இறைவனின் அருள்...
 பலர்  இறையருளை சேர்ப்பதற்கு பதிலாக...பல  பாவங்களை செய்து.. ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்வதால். அவர்களுக்கு மட்டும்  அல்லாமல்...அவர்கள் பின்னால் வரும் வாரிசுகளையும்... பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது..

ஒட்டுமொத்தமாக எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பதில் என்னுடைய செய்கையால் அல்லது பழக்கவழக்கத்தால் மற்றவர்களின் இதயம் புண்படாத அளவுக்கு நான் வாழ்ந்து கொண்டாலே போதும் அதுவே இறையருளின் முதல் படியாகும்..

 

Tags :

Share via