இங்கிலாந்தில் வரலாறு காணாத கடும் வெப்பம் ரயில்வே சிக்னல் உருகியதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

by Editor / 21-07-2022 01:48:38pm
இங்கிலாந்தில் வரலாறு காணாத கடும் வெப்பம் ரயில்வே சிக்னல் உருகியதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு


இங்கிலாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக ரயில்வே சிக்னல் உருகி போனதால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்வீட்டரில் வெயிலில் ரயில்வே சிக்னல் உருகி  கிடக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தங்கள் ரயில் பயணங்களை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo