பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து இன்று பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை துறைமுக அதிகாரிகள் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்ததோடு, தங்களுடைய படகுகளை பத்திரமாக நிறுத்திக் கொள்ளவும் மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags : Number One Storm Warning Cage Boom at Pamban Port.