மழை.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

by Editor / 02-12-2024 10:15:27am
மழை.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் 500 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ., தருமபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஊத்தங்கரை பாம்பாறு அணை நிரம்பியதால் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், பேருந்துகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் வீடியோ வைரலாகி உள்ளது.

 

Tags : கார், பேருந்துகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

Share via