4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

by Editor / 02-12-2024 10:09:26am
4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (டிச., 02) பிற்பகல் 1 மணி வரை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது.

 

Tags : 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Share via