திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் 3 வீடுகள் மீது பாறைகள் சரிந்து உருண்டு விழுந்து விபத்து.

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வ.உ.சி.நகர் கருமாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மலை அடிவாரப் பகுதியில் உள்ள வீடுகள் மீது 100 அடி உயரத்தில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்தது மலையடிவாரத்தில் பாறைகள் விழுந்துள்ள 3 வீடுகளுக்குள் அந்த இடிபாடுகளில் 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எஸ்பி சுதாகர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வரை முகாமிட்டு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பதில் சவால் ஏற்பட்டதால் தற்போது NDRF வீரர்கள் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags : திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் 3 வீடுகள் மீது பாறைகள் சரிந்து உருண்டு விழுந்து விபத்து.