மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்
டெல்லி வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், யமுனா நதி பெருக்கெடுத்ததால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, வடக்கு டெல்லியில் உள்ள சந்த் பர்மானந்த் மருத்துவமனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி, மருத்துவமனை கட்டிடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Tags :



















