தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் புதிய திட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் 2019ல் கேரள பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் கொண்டுவரப்பட்டது. இதை பின்பற்றி தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காலை, நண்பகல், பிற்பகல் என 3 முறை தண்ணீர் குடிக்க இடைவேளை விடப்படும் என கூறப்படுகிறது.
Tags :