by Staff /
04-07-2023
03:46:49pm
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் வரும் 6ஆம் தேதி பர்கூர் ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் அறிவித்துள்ள இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக கழக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Tags :
Share via